பாதி மனிதன், பாதி நாய் உருவம் கொண்டு காட்டுக்குள் நடமாடும் கொடிய உயிரினம்!
04 Nov,2019
அமெரிக்காவில் வளர்ப்பு பிராணிகளை கொடூரமாக வேட்டையாடும் விசித்திர உயிரினம் தொடர்பில் தகவல் வெளியாகி பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.
Dogman (நாய் மனிதன்) என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த விசித்திர உயிரினமானது அலறும் சத்தத்தை ஜோடி குக் (Joedy Cook) என்பவர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி அந்த விசித்திர உயிரினமானது பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் இருந்தது என கூறும் அவர், 9 அடி உயரமும் சுமார் 182 கிலோ எடையும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விசித்திர உயிரினம் தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக வட அமெரிக்காவில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறும் ஜோடி குக், இதுவரை மூன்று முறை அதன் உறுமல் சத்தங்களை பதிவு செய்துள்ளார். அந்த சத்தமானது உண்மையில் கேட்பவர்களை பீதியடைய வைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெல்பரூக் (Bellbrook) பகுதியில் வைத்து ஒருமுறை அந்த விசித்திர உயிரினத்தின் அலறல் சத்தத்தை அவர் பதிவு செய்துள்ளார். ஆனால் சின்சினாட்டி (Cincinnati) பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட குரலானது மிகவும் கொடூரமாக இருந்தது எனவும், அதுபோன்ற ஒரு குரலை தாம் வாழ்க்கையில் இதுவரை கேட்டது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக டைடன் (Dayton) பகுதியில் இருந்து குறித்த மிருகத்தின் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பயத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த விசித்திர உயிரினத்தால் தாக்கப்படும் வளர்ப்பு பிராணிகள் கொடூரமான முறையில் இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இருப்பினும் அந்த உயிரினம் தொடர்பில் இதுவரை தெளிவான புகைப்படம் ஏதும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.