கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணை தாக்க முயன்ற மனைவி!
25 Oct,2019
சீனாவில் கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணையும், கணவரையும் நடுரோட்டில் வைத்து அவரது மனைவியும் மனைவியின் தோழியரும் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிழக்கு சீனாவின் பன்சாங் கவுண்டியில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் காதலியை மனைவியிடமிருந்து காப்பாற்றுவதற்காக, அந்த நபர் அந்த பெண் மீது படுத்து அரணாக மாறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அப்போதும் அவரை விடாத மனைவியும், அவரது தோழியரும் இருவரையும் தொடர்ந்து தாக்குகின்றனர்.
மேலும் கணவருடன் தவறான உறவில் ஈடுபட்ட பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கில், அவரது ஆடைகளையும் அந்த பெண்கள் கிழிக்க முயல்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.