துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்தப் போவதாக ஜேர்மனி அறிவிப்பு!
18 Oct,2019
துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்தப் போவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் உரையாற்றிய போதே ஜேர்மனிய ஜனாதிபதி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிரியா மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறும் அவர் துருக்கி அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக அதிகளவான அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோர்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ததை நிறுத்துவதாக முன்னதாக அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிரியாவின் வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி இராணுவத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன