சிங்கத்தின் பகுதிக்குள் நுழைந்து நடனமாடிய பெண்-VIDEO
08 Oct,2019
நியுயோர்க்கின் பிராங்ஸ் உயிரியல் பூங்காவில் சிங்கம் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு நுழைந்த பெண்ணொருவர் நடனமாடியதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வெளியிலிருந்த ஒருவர் அதனை பதிவு செய்துள்ளார்.
சிங்கத்தின் பகுதிக்குள் நுழைந்த பெண்மணி கைகளை காண்பித்து நடனமாடுவதை வீடியோ காண்பித்துள்ளது.
சிங்கம் அவரை நோக்கி முன்னேறி வருகின்ற போதிலும் அச்சமற்றவராக அந்த பெண் காணப்படுகின்றார்.
எனினும் அந்த பெண் எப்படி உள்ளே நுழைந்தார் எவ்வளவு நேரம் அங்கிருந்தார் எப்படி வெளியேறினார் என்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.
தடுப்புவேலியை கடந்து சிங்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்த பெண் பெரும் தவறு செய்தார் தனது உயிரிற்கு ஆபத்து ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மோசமான விதி முறை மீறல் இதன் காரணமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.