எஜமானரை காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட நாய்!
18 Aug,2019
மதுரையில் கொலைகார கும்பலிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய், அரிவாள் வெட்டுப்பட்டு உயிரிழந்தது சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அசோக்கின் நண்பர்கள் 8 பேர் முத்துக்குமாரைத் தேடி அவர் வேலை செய்யும் அப்பள நிறுவனத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு முத்துக்குமார் இல்லாத நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் செந்திலிடம் அவர் எங்கே எனக் கேட்கவே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி, செந்திலை அவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இந்த நேரம் உள்ளே இருந்து ஓடி வந்த செந்திலின் வளர்ப்பு நாய், கொலைக்கும்பல் மீது பாய்ந்து அவர்களை விரட்டியடித்துள்ளது.
ஆனாலும் கொலைக்கும்பல் அரிவாளால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்தப் போராட்டத்தில் செந்திலின் மனைவி தமிழ்ச்செல்வியின் 2 விரல்கள் துண்டானது.