அழகிய நிலவு சிரிக்கிறது
15 Aug,2019
அழகிய நிலவு சிரிக்கிறது
ஆயிரம் பறைவைகள் பறக்கிறது
ஆயிரம் பறைவைகள் பறக்கையிலே
அழகிய கீதங்கள் இசைக்கிறது
காலைச் சூரியன் கண் விழிக்க
காற்றினில் ஆடிய கார்த்திகை பூ
காலையின் அழகை பூமியில் வரையுது
கண்ணைத் திறந்து ஒரு மல்லிகை மொட்டு
சோம்பலை முறித்து சிரிக்கிறது
காற்றினில் ஆடிய திசைகளில் என் மனம்
பாட்டுக்கு மொட்டு ஒலி இசைக்கிறது
கண்ணுக்கு தெரியா தூரத்தில் இருந்து
என் கனவினை ஒருத்தி பாடுகிறாள்
கனவுகள் எழுதிய கவிதையின் நினைவினை
காத்திடம் சொல்லி அனுப்புகிறாள்