உணவுக்கு மதம் இல்லை” என்றால் ஹலால் குறியீடு மட்டும் ஏன்?
02 Aug,2019
உணவு விநியோக நிறுவனங்களில் ஹலால் குறியீடு குறிப்பிட்டுள்ளதன் மூலம் சோமேட்டோ நிறுவனம் பாகுபாடு காட்டுவதாகக் கூறி சிலர் அந்த நிறுவனத்தின் ஆப்பில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்து அல்லாதவர் கொண்டு வந்த உணவை வாங்க மறுத்து ஆர்டரை ரத்து செய்த வாடிக்கையாளரிடம் உணவில் மதம் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது.
இது பாலரால் பாராட்டப் பட்டாலும் சிலர் புதிய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மதம் பார்க்க வேண்டாம் எனக் கூறும் சோமேட்டோ நிறுவனம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் விருப்பத்துக்காக தங்கள் உணவுகளில் ஹலால் குறியீடு போடுவதாகவும், இது இரட்டை நிலைப்பாடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் ப்ளே ஸ்டோரில் சோமேட்டோவுக்கான தங்களது நட்சத்திர மதிப்பீட்டை ஒரு புள்ளியாக குறைத்து வருகின்றனர். இதே போல் ஹலாலுக்கு எதிராகக் கருதப்படும் ஜட்கா உணவை பற்றி ஏன் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.
வாடிக்கையாளர்களுக்கு தங்கள் உணவகம் என்னென்ன மாதிரியான தகவல்களை தர வேண்டும் என்று உணவகங்கள் தான் விரும்பி முடிவெடுப்பதாகவும், ஜட்கா உணவுகளையும் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சோமேட்டோ விளக்கம் அளித்தது.
ஆனால் அதை ஏற்காமல் சில வாடிக்கையாளர்கள் அந்த ஆப்பை தங்கள் போன்களில் இருந்து பதிவு நீக்கம் செய்து வருகின்றனர்.