முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை!
01 Aug,2019
முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் என ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நியூயோர்க் மற்றும் லண்டனின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துவது போன்றும், இஸ்லாமியர் அல்லாதர்களை கொல்வோம் எனவும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள ஒளிப்படங்களிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மெம்ரி ஜேடிடிஎம் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் இந்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.
‘நீங்கள் நாங்கள் தோற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம், இஸ்லாமிய ஆதரவாளர்கள் சரணடைந்து விட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் கூடிய விரைவில் லண்டன் மற்றும் பல இடங்களில் தாக்குதல் நடக்கும்’ என இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இருக்கும் மஞ்சள் நிற வாடகை வாகனத்திற்கு அருகே ஒரு தற்கொலைத்தாரி குண்டுடன் நிற்கிறான், அதில் எங்கள் இரத்தம் வெற்றியடையும், ஒரு சிறந்த அழிவை கொடுப்போம், இஸ்லாமியர் அல்லாதவர்களை அழிப்போம்’ என மற்றுமொரு ஒளிப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது ஒளிப்படத்தில், San Francisco இல் உள்ள தெருவொன்றில், ஐ.எஸ் பயங்கரவாதி கொடியை கையில் பிடித்தவாறு நிற்கிறான். அதில், எல்லாவற்றிற்கும் பதில் கொடுங்கள், தொண்டையை கிழித்து அவர்கள் இறப்பதை பாருங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணமாக லண்டன் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.