கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் தலையில் கல் போட்டு கொலை!
20 Jul,2019
தேனி மாவட்டம் தேவாரத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவாரம் மலையடிவார தோட்டம் ஒன்றில் தங்கி அதனை பராமரித்து வந்த விவசாயி செல்லத்துரை காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடல் நிலை பாதிப்பால் தடுமாறி கீழே விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி ஜெலீனா தெரிவித்த நிலையில், நம்ப மறுத்த உறவினர்கள், செல்லத்துரையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் ஜெலினாவுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லத்துரையை கொன்றிருக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக ஜெலீனா, சுதாகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கடந்த புதன் கிழமை இரவு செல்லத்துரை உறங்கிய பின் இருவரும் சேர்ந்து அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்