பிளேன்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்!
20 Jul,2019
சீனாவில் 13 வயதே ஆன சிறுவன் இரு சிறிய ரக பிளேன்களைத் திருடி ஓட்டிப் பார்த்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள தைஹு என்ற ரிசார்டில் மெக்கானிக்குகள் பழுது நீக்கி ஓட்டிப்பார்த்ததை அருகில் இருந்த சிறுவன் கவனித்து வந்தார். ஆர்வ மிகுதியில் கடந்த திங்களன்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி ரிசார்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஷீ ரே ரக பிளேனுக்கு ஏறி ஓட்டிப்பார்த்தார். அதை இடித்தவாறு நிறுத்தியபோதும், துளியும் அச்சமின்றி ஆர்வமிகுதியால் உயிரையும் துச்சமாக மதித்து மற்றொரு பிளேனையும் ஓட்டிப்பார்த்தார்.
பிளேனின் சேத மதிப்பு 8 ஆயிரம் யுவானாக இருந்தாலும், அவரது தந்தையிடம் ரிசார்ட் நிறுவனம் 2 ஆயிரம் யுவான்களை மட்டுமே அபராதமாகப் பெற்றது. 13 வயதே ஆனாலும் பயிற்சி இன்றி 2 மணி நேரம் கவனித்ததை மட்டும் வைத்து பிளேனை இயக்கிய சிறுவனை, பிளேன் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.