குடித்துவிட்டு விமானத்தில் தகராறுஆஸ்திரேலிய செய்த மாடல் அழகி..!
17 Jul,2019
ஆஸ்திரேலிய மாடல் அழகி, குடித்துவிட்டு விமானத்தில் தகராறு செய்த குற்றத்துக்காக 3 ஆண்டுகளுக்கு நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017-ல் ஆஸ்திரேலியா சார்பில் மிஸ் வேர்ல்ட் இறுதிப் போட்டியில் பங்கேற்றவரும், அதே ஆண்டு வளரிளம் பருவத்தில் பலாத்காரத்துக்கும், கொடுமைகளுக்கும் ஆளானது குறித்து ஒரு மணி நேரம் ஃபேஸ்புக் லைவ் பதிவிட்டும் பிரபலமடைந்தவர் அடவ் மார்ன்யங் (Adau Mornyang)
தனது 10 வயதில் தென் சூடானில் இருந்து போரால் பாதிப்புக்கு ஆளாகி ஆஸ்ரேலியாவில் குடியேறியவர். 25 வயதான அவர் கடந்த பிப்ரவரியில் மெல்பர்னில் இருந்துஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் விமானத்தில் பயணித்த போது அதீத குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு விமானப் பணிக்குழுவைத் தாக்கி ஆபாசமாகவும் நடந்துகொண்டார்.
அவருக்கு 100 மணி நேர சமூக சேவை, 3 ஆண்டுகள் நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு குடிபோதையிலிருந்து மீள்வதற்கான ஆலோசனையும் வழங்க லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. தான் போதையால் தன் சுய குணாதிசயங்களை இழந்து, மிக மோசமாக நடந்துகொண்டதாக அடவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.