பெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா!

11 Jul,2019
 

 

 
பெண்கள், அவர்களின் மார்பகத்தைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவசியம். தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள், மார்பகங்களைப் பராமரிக்கும் உள்ளாடை மீது கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உள்ளாடையின் தரமும், கட்சிதமாகப் பொருந்த உதவும் அதன் அளவும்தான் மேலாடைக்கு எடுப்பான தோற்றத்தைத் தரும். எனவே கடைக்குச் சென்று உள்ளாடையைக் கேட்டு வாங்குவதில் பெண்கள் எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் காட்டக்கூடாது. நாப்கின்களை பெண்களே முன்வந்து வாங்கிச்செல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல உள்ளாடை மீதான விழிப்புணர்வும் பெண்களிடம் இருக்க வேண்டியது கட்டாயம்.
 

பருவமடையும் வயதில் இருந்தே பெண்கள் மார்பகங்களை பராமரிக்கும் பிராவை அணியத் துவங்கிவிடுகின்றனர். பல ஆண்டுகளாக பிராவைப் பயன்படுத்தி வரும் பெரும்பான்மையான பெண்களுக்கே இன்னும் அவர்களின் சரியான அளவு என்ன என்பது தெரிவதில்லை. மார்பகங்களுக்குச் சற்று கீழ்ப்புறமாகவும் இடுப்புக்கு மேலும் உள்ள பகுதியில் தான் பிராவைப் பொருத்துகிறோம். பெரும்பாலும் இந்த இடுப்புக்கு மேல் உள்ள அளவைச் சொல்லி பிராவைக் கேட்டு வாங்கும் பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவுக்குத் தகுந்த கப் சைஸ்கள் கொண்ட பிராவை வாங்குவதில்லை. சரியான அளவு இல்லாத பிராக்களால் தோற்றம் சிறப்பாக வெளிப்படாது, உடல்ரீதியாகவும் தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
உள்ளாடைகள் அணியும் போது நிறத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதாவது, வெளிர் நிற ஆடைகளுக்கு வெளிர் நிறங்களிலும் அடர்நிறங்கள் கொண்ட ஆடைகளுக்கு அடர் நிறங்களிலும் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. புடவை, சுடிதார், வெஸ்டர்ன் ஆடைகள், டி-ஷர்ட் என ஆடைத் தேர்வுக்கு ஏற்ப பிராவை அணிந்தால் தோற்றம் அழகுறும். தளர்ந்து போயிருக்கும் மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்க ‘அண்டர் வயர்டு பிரா'(Underwired Bra) பயன்படுகிறது, எடைக் கூடுதலாக உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மார்பகம் சிறியதாய் உள்ளதே எனக் கவலைகொள்ளும் பெண்கள் ‘பேடட் பிரா'(Padded Bra)க்களைப் பயன்படுத்தலாம். இப்படிப் பிராக்களில் பல அம்சங்கள் உள்ளன. பெண்கள் ஒரே மாதிரியான பிராக்களை உபயோகிக்காமல், உடுத்தும் உடைகள், தாங்கள் செய்யும் வேலை, செல்லும் இடத்தைப் பொறுத்து ஐந்து அல்லது ஆறு வகையான பிராக்களை வைத்திருத்தல் அவசியமாகும்.
டீனேஜ் பிரா (Teenage Bra): முதல்முறையாக பிரா பயன்படுத்தும் பெண்கள் டீனேஜ் பிராக்களை பயன்படுத்தும்போது, அசௌகர்யமின்றி இருக்கலாம். எவ்ரிடே பிரா (Everyday Bra): எளிமை, குறைந்த எடை மற்றும் பராமரிக்க எளிதாக இருக்கக்கூடிய பிரா இதுவாகும். தினசரி ஆடைகளுக்குப் பயன்படுத்தலாம்!
டி-ஷர்ட் பிரா (T-Shirt Bra): மெல்லிய டாப்ஸ் மற்றும் டி- ஷர்ட்களைப் பயன்படுத்தும் பெண்கள் இந்த வகை பிராவைப் பயன்படுத்தலாம். புஷ் அப் பிரா (Push Up Bra): பெண்களுக்கு எடுப்பான மார்பகத்தைக் கொடுக்கவும், தளர்ந்த மார்பகத்தைத் தாங்கிப் பிடிக்கவும் புஷ் அப் பிராக்கள் உதவுகின்றன.
பிரைடல் பிரா (Bridal Bra): பிரத்யேகமாக திருமணத்திற்காகவே தயாரிக்கப்படுபவை பிரைடல் பிராக்கள். இந்தப் பிராக்களில் புஷ் அப், ஃபிரன்ட் ஓப்பன் (Front Open), லாங்லைன் (Longline) உள்ளிட்டப் பல வகை அம்சங்கள் உள்ளன.
நர்சிங் பிரா (Nursing Bra): இவ்வகை பிராக்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கானது. சாதாரண பிராக்களில் ஊக்குகள் பின்பகுதியில் இருப்பதால், அதனை அணிந்திருக்கும்போது குழந்தைகளுக்கு உடனடியாக பாலூட்டுவது சிரமம். நர்சிங் பிராவில் முன்பகுதியில் இருபக்கமும் பட்டன் இருப்பதால் தாய்மார்களுக்கு பாலூட்ட வசதியாக இருக்கும்.
 

ஃபிரன்ட் ஓப்பன் பிரா (Front Open Bra): இந்தப் பிராவில் ஊக்கு/கொக்கி முன்பகுதியில் அமைந்திருக்கும். பின்பகுதியில் ஊக்குபோட சிரமப்படுபவர்கள், இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தலாம். ப்ளஸ் சைஸ் பிரா (Plus Size Bra): மார்பளவு பெரிதாக இருக்கும் பெண்கள் ப்ளஸ் சைஸ் பிராக்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையான பிராக்கள் மார்பகத்தை முழுமையாக உள்ளடக்கிக்கொள்ளும். ஸ்ட்ராப்லெஸ் பிரா (Strapless Bra): தோள்பட்டை ஸ்ட்ராப் இல்லாத ஆடைகளை (Strapless Dresses) அணியும்போது, ஸ்ட்ராப்லெஸ் பிராக்கள் உதவியாக இருக்கும்.
கேஜ் பிரா (Cage Bra): லோ நெக் டாப்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணியும்போது இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும். இது தவிர, பிராலெட் பிரா (Bralette Bra), கேமி பிரா (Cami Bra), ஸ்டிக் ஆன் பிரா (Stick On Bra), டியூப் பிரா (Tube Bra) எனப் பலவகையான பிராக்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான ஆடைக்கும் ஏற்றபடி இவ்வகையான பிராக்களைப் பயன்படுத்தினால் சௌகரியமாக இருப்பதுடன் தோற்றமும் சிறப்பாக இருக்கும். எனவே, இவற்றின் பெயர்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு அடுத்தமுறை உள்ளாடைகளை சமர்த்தாக ஷாப்பிங் செய்யலாம்!

 



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies