வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை! மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிறுவனம்
09 Jul,2019
லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்று, ஊழியர்களை வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலைக்கு வந்தால் போதும் என அறிவித்துள்ளது.
வழக்கமாக, பல ஐடி நிறுவனங்களில் வாரத்திற்கு 5 அல்லது 6 நாட்கள் வேலை பார்க்கும் சூழல் பெரும்பாலான நிறுவனங்களில் இருக்கிறது. ஆனால், லண்டனில் உள்ள Portcullis Legals என்ற நிறுவனம், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை மற்றும் ஊதிய உயர்வும் அறிவித்து ஊழியர்களை உற்சாகப்படவைத்துள்ளது.
9 ஊழியர்களை வைத்து, 5 மாதம் சோதனை செய்து, அதன் பின்னர் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை முறையை நிரந்தரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டிருக்கும்போதே, ஊழியர்கள் மிக உற்சாகத்துடன் வேலை செய்கிறார்கள் எனவும் இதனால், ஊழியர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்து வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது எனவும் Portcullis Legals-ன் நிறுவனர் LadBible தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்நிறுவன ஊழியர்களிடம் கேட்கும்போது, வாரத்திற்கு 3 நாள் விடுமுறை கிடைப்பது தங்களுடைய நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட உதவிகரமாக இருப்பதாகவும் மன நிறைவுடன் வேலை பார்க்க முடிகிறது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்