கடல் சூடானால், எந்த மீன் தாங்கும்?
23 Jun,2019
பருவநிலை மாற்றம் நிலத்தையும் வானத்தையும் போல கடலையும் வெகுவாக பாதிக்கும். அப்படி பாதிக்கையில், கடல்வாழ் உயிரினங்கள், அதை எவ்வாறு தாக்குப்பிடிக்கும் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
கடல் நீரின் வெப்பம் கூடும்போது, அதில் கரியமிலத் தன்மையும் அதிகரிக்கும்.
இது, மீன்களின் ஆக்சிஜன் ஈர்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும்.
ஆனால், ஸ்க்விட் எனப்படும் கணவா மீன்கள் இந்த மாற்றத்தை சமாளித்து வாழும் திறனைப் பெற்றுள்ளதாக, 'கன்சர்வேசன் பிசியாலஜி' ஆய்விதழில் வெளியான ஆய்வு தெரிவித்துள்ளது.
கணவா மீன்களின் ஆயுள் குறைவுதான். என்றாலும் அவை வேகமாக வளரக்கூடியவை.
ஆய்வகத்தில் கரியமிலத் தன்மையுள்ள நீரில் கணவா மீன்களை வளர்த்தபோது, நீரின் நச்சுத் தன்மையையும் மீறி அவை நன்கு வளர்ந்தன.
எனவே, புவி வெப்ப மாதலின் தாக்கம் கடலில் அதிகரித்தால், அற்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் தன்மை இல்லாத உயிரினங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும்.
அதே நேரம் கணவா போன்ற தாங்கு திறன் கொண்ட மீன்களின் எண்ணிக்கை மிதமிஞ்சி அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன