கழுத்து கவர்ச்சிஅழகாகும்
19 Jun,2019
முகம் அழகாக இருந்தாலும் கழுத்து கருமையாக இருந்தால் அது பார்ப்பதற்கு பொருத்தமற்றதாக இருக்கும். ஆக சிலருக்கு முன் கழுத்து மற்றும் பின் கழுத்து கருமையாகக் காணப்படும். இதைப் போக்க நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கருத்த கழுத்து நிறம் மாறி உங்கள் கழுத்து அழகாகும் கவர்ச்சியாகும்.