கிறீன்லாந்து பனிப்பாறைகளை ஆராய புதிய உணர்கருவிகள் – இங்கிலாந்து
17 Jun,2019
கிறீன்லாந்தில் 2 கி.மீ பருமனைக் கொண்ட பனிக்கட்டியின் கீழ் வைக்கக்கூடிய புதிய உணர்கருவிகளைப் (சென்சர்கள்) பரிசோதிக்க இங்கிலாந்து விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பனிப்பாறைகள் கடலை நோக்கிச் செல்லும் வழி குறித்த தனித்துவமான தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கிரையோஎக்ஸ் (Cryoeggs) எனப் பெயரிடப்பட்ட, சாதனங்களை பனிப்பாதைக்கு கீழே இயக்கப்படும் உருகும்நீரின் செயற்பாடுகளை விஞ்ஞானிகளுக்கு மீண்டும் தெரிவிக்கும்.
இந்த நீரானது, பனிக்கட்டிகளின் ஓட்டத்தை உயர்த்துகிறது, அத்துடன் வெப்பமான உலகில் கடலுக்கு வெளியேயுள்ள பனியின் அளவு அதிகரிக்கக்கூடும்.
இது உலகளாவிய கடல் மட்டங்களை உயர்த்தும் என்பதுடன் கிரீன்லாந்தில் உள்ள அனைத்து பனிக்கட்டிகளும் உருகினால், 7 மீற்றர் அளவில் கடல் மட்டம் உயரும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.
இந்த செயல்முறை எவ்வளவு விரைவாக இடம்பெறும் என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே. புதிய உணர்கருவிகள் அதனை செவ்வனே மேற்கொள்ளும் என்பது அவர்களின் நம்பிக்கையாகவுள்ளது.