இலங்கை தற்கொலைதாரி தொடர்பில் விசாரணையின் போது வெளியான புதிய தகவல்!
09 Jun,2019
ஈஸ்டர் தின குண்டு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 2013ஆம் ஆண்டு பித்தளை, இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் அடங்கிய கொள்கலனை திருடியுள்ளார் என கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பொலிஸ் கோவைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மொஹம்மட் இப்ராஹிம் இன்சார் அஹமட் என்ற மேற்படி குண்டுதாரி சங்கரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்தவராவார்.
2013.05.30ஆம் திகதி 61 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த பொருட்களை திருடியுள்ளார்.
இந்த வழக்கு இவ்வருடம் ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்த போது குறித்த குண்டுதாரியும் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தார்.
அவர் தெமட்டகொட பேஸ்லைன் வீதியில் உள்ள மஹவில பார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.