நட்சத்திரம் கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்தனர்
07 Jun,2019
கடந்த வருடம் பிடிஎஸ் 70 எனும் நட்சத்திரமானது கோளாக மாறுவதை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக படம் பிடித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு நட்சத்திரமும் கோளாக மாற்றம் பெறுவது கண்டறியப்பட்டு உள்ளது. அருகருகே காணப்படும் இரு கோள்களையும் ஒரே நேரத்தில் படம் பிடித்து ஆய்வாளர்கள் அசத்தியுள்ளனர்.
கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட புதிதாக தோன்றும் கோளுக்கு தற்போது பிடிஎஸ் 70பி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிதாக தோன்றும் கோளுக்கு பிடிஎஸ் 70சி என பெயரிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்திற்கு அப்பால் காணப்படுகின்றன. அத்துடன் பிடிஎஸ் 70பி ஆனது யூப்பிட்டரின் திணிவை போன்று 4 தொடக்கம் 17 மடங்கு திணிவை உடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.