85 நோயாளிகளைக் கொலைசெய்த ஆண் தாதிக்கு ஆயுட்தண்டனை
08 Jun,2019
வடக்கு ஜேர்மனியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் தாதியாக வேலைசெய்த நீல்ஸ் ஹுகெல் 85 நோயாளிகளைக் கொலைசெய்த குற்றத்துக்காக அவருக்கு ஆயுட்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
42 வயதான ஹுகெல் மீது ஏற்கனவே இதற்கு முன்னர் இரு கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 1999 – 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இதயத்தில் பாதிப்பு உள்ள மக்களுக்கு மாரடைப்பு மருந்துகளை வழங்கியுள்ளார்.
விசாரணை முடிவில் தீர்ப்பு வழக்கப்பட்டபோது; நீல்ஸ் ஹுகெல் தனது பயங்கரமான செயல்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் என்று கூறினார்.
நீதிபதி செபஸ்ரியன் பூயர்மன் தெரிவிக்கையில்; குற்றவாளி நீல்ஸ் ஹுகெலின் கொலைகாரத்தனத்தை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.
நீல்ஸ் ஹுகெல் ஜேர்மனியின் நவீன வரலாற்றில் மிகப்பெரிய கொலைகாரனாகக் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.