பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்
31 May,2019
பெண்களை அழகாக காட்டும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்
மற்ற நவநாகரீக உடைகளை விட, புடவையில்தான் பெண்கள் மிகவும் அழகாகவும், கவரச்சியாகவும் பாரம்பரியத் தோற்றத்திலும் ஒளிர்வார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம்.
1. புடவைக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்கள்
தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள்.
2. டபுள் கலர் ஜாக்கெட்:
இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உடலுக்கு ஒரு நிறமும் வைத்து தைக்கப்படும் ஒரு டிசைன். இது அதிகப்படியான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.
3. கருப்பு மற்றும் கோல்டன் நிற ஷீர் ஜாக்கெட்:
ஷீர் டைப் பிடிக்குமானால், இந்த மாதிரியான ஸ்டைலில் ஜாக்கெட்டை மேற்கொள்ளலாம்.
4. பஃப் ஜாக்கெட்:
இப்போது பஃப் கை வைத்த ஜாக்கெட்டுகள் பல விதமாக டிசைன்களில் கிடைக்கிறது. இந்த முறையில் வித்தியாசமாக பஃப் கொண்ட ஜாக்கெட்டை அணியலாம்.
5. மின்னும் ஜாக்கெட்:
இது மற்றொரு ஸ்டைலான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால், இது சில்வர் மற்றும் கோல்டன் கலந்து மின்னுவதால், இதனை சில்வர் மற்றும் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அனைத்து புடவைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
6. வெல்வெட் ஜாக்கெட்:
வெல்வெட் ஜாக்கெட் ஒரு ஸ்டைலான லுக்கை கொடுக்கும். அதிலும் இந்த ஜாக்கெட்டின் முனைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப் பதால், இது ப்ளைனான அல்லது அதிக வேலைப்பாடுகள் செய்யப் பட்ட புடவைக்கு பொருத்தமாக இருக்கும்.
7. ஷீர் லேஸ் ஜாக்கெட்:
புடவையை வித்தியாசமான முறையில் அணிய நினைத்தால், ஷீர் லேஸ் கொண்ட ஜாக்கெட் அணிந்தால், அது புடவையின் தோற்றத்தையே மாற்றும்.
8. ஃபுல் நெக்லைன் ஜாக்கெட்:
இந்த ஜாக்கெட் பார்த்தால், இதன் கழுத்து மேலே ஏறியும், முக்கால் கை கொண்டும் இருக்கும். இந்த மாதிரியான ஸ்டைலை, பல்வேறு நிறங்கள் கொண்ட புடவைக்கு மேற்கொள்ளலாம்.
9. கோல்டன் ஜாக்கெட்:
தங்க நிறம் கொண்ட புடவைக்கு, காலர் கொண்டவாறான கோல்டன் ஜாக்கெட்டை அணிந்தால், அது ஒரு ஹை லுக்கை கொடுக்கும்.
10. நீள்வட்ட ஜாக்கெட்:
இந்த ஜாக்கெட்டின் ஸ்பெஷலை பார்த்தால், இதன் கழுத்து நீள்வட்ட வடிவில் இருக்கும். மேலும் முழுக் கை கொண்டிருக்கும்.