முருங்கை மசாலா
28 May,2019
முருங்கைக்காய் - 4,
சின்ன வெங்காயம் - 10,
பச்சைமிளகாய் - 2,
தக்காளி - 1,
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் முருங்கைக்காய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் இறக்கி, கடாயில் கடலை எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.