பெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்
17 May,2019
சவூதி அரேபியா – ரியாத் என்ற பகுயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண் ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
26 வயதான லவ்லி அகோஸ்டா பார்லேலோ என்ற பெண், பல மாதங்களாக, சவுதி அரேபியாவின் ரியாத்தில் பணக்கார குடும்பத்தில் பணியாற்றி வருகிறார்.
குறித்த பணிப்பெண் வீடு உரிமையாளரின் விலை உயர்ந்த தளபாடங்களை சூரியன் ஒளிபடும் படி வெளியில் போட்டதால் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒரு மரத்தோடு இணைக்கப்பட்டு கயிற்றால் கட்டி தண்டனை வழக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.