வெண்டைக்காய் குழம்பு
15 May,2019
என்னென்ன தேவை?
பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்தமிளகாய் - 2,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
தக்காளி - 1, வெல்லத்துருவல் - 2 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு,
நல்லெண்ணெய் - தேவைக்கு,
வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை - சிறிது.
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கி, புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியதும் வெல்லம், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து இறக்கவும்.