ஒட்டு மொத்த உலகையும் அழிவில் இருந்து காப்பாற்ற வல்ல கப்பல் இது தான் !
15 May,2019
நீங்கள் குளிர் நாட்டில் வசித்து வரலாம். இல்லையென்றால் சூடான சூழ் நிலையில் உள்ள ஒரு நாட்டில் வசித்து வரலாம். ஆனால் நீங்கள் அவதானித்த ஒரே விடையம் என்னவென்றால், ஒவ்வொரு வருடமும் வெப்பம் அதிகரித்துக்கொண்டு செல்வது தான். ஆம் ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்பம் அதிகரித்துச் செல்கிறது. இதனை உலகவெப்பமாதல்(global warming ) என்று அழைக்கிறார்கள். உலகில் 2 துருவங்கள் உள்ளது. அது ஆட்டிக் அந்தாட்டிக் ஆகும். இங்கே உள்ள பனிப் பாறைகள் தான் சூரிய ஒளியின் வெப்பத்தை மீண்டும் விண்ணுக்கு திருப்பி அனுப்பிவிடும் கண்ணாடியாக செயல்படுகிறது.
அது போக வழி மண்டலத்தில் உள்ள ஓசூன் படலமும் பெரும் தொகையான சூரிய ஒளியை மீண்டும் விண்ணுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறது. ஆனால் மனிதர்களோ பூமியைக் குடைந்து கோடிக்கணக்கான லீட்டர் மசகெண்ணையை எடுத்து அதனை பெற்றோலாக மாற்றி கார்களில் விட்டு ஓடுவதாலும், பெரும் தொழில்ற்சாலைக் கழிவுகளாலும் எமது காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து, காபனீர் ஆக்சைட் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஓசூன் படலத்தில் ஏற்கனவே ஓட்டை விழுந்துள்ளது. ஒந்த ஓட்டை ஊடாக உள்ளே நுளையும் . சூரிய கதிகர்கள் தற்போது ஆட்டிக் மற்றும் அந்தாட்டிக்கில் உள்ள பனிப் பாறைகளை உருக்க ஆரம்பித்துவிட்டது.
பூமி தோன்றிய காலம்(அதாவது பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்) இருந்தே பனிக் கட்டியாக இருந்து வந்த இந்த பாறைகள். தற்போது உருக்க ஆரம்பித்துவிட்டதால். அவை திருப்பி அனுப்பும் சூரிய கதிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய. தற்போது உள்ளே நுளையும் மித மிஞ்சிய சூரிய கதிர்கள், பூமியை தாக்க. பூமி மிக மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இது மனித குலத்தின் அழிவுக்கு வித்துட்டுள்ளது. மனிதர்கள் பூமியில் அழியும் ஆரம்ப நிலையை இது தோற்றுவித்துள்ளது. இன் நிலை நீடித்தால், மனிதர்கள் வேறு ஒரு கிரகத்தை பார்த்து, வீட்டை மாற்றுவது போல மாற்றவேண்டி இருக்கும். ஆனால் அது சில நூறு மனிதர்களுக்கே சாத்தியம். மீதமுள்ள அனைவரும் பூமியில் இறக்க நேரிடும். அதுவும் மிகவும் கேவலமான நிலையில். இன் நிலையில் தான் விஞ்ஞானிகள், ஒரு அற்புதமான திட்டத்தை முன் வைத்துள்ளார்கள்.
அது என்னவென்றால், மிகப்பெரிய மிதக்கும் கப்பல்களை செய்து, அவை கடல் 24 மனி நேரமும் நீரில் உள்ள உப்பை துகள்களாக மாற்றி காற்றில் தெளித்துக் கொண்டு இருக்கும். இதனால் காற்றில் உப்பு துகள்களின் அளவு அதிகரிக்கும். எனவே சூரிய ஒளியை அது தெறிக்கச் செய்து மீண்டும், விண்ணுக்கு அனுப்பிவிடும். இதுபோக காற்றில் உள்ள காபனீர் ஆக்ஸைட்டின் அளவை குறைக்க இவை பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய , உலகில் மீண்டும் குளிர் அதிகரிக்கும். இதனால் ஆட்டிக் மற்றும் அந்தாட்டின் பகுதிகளில் பனிப் பாறைகள் மீண்டும் இறுகி கட்டியாகும் . பின்னர் அவை சூரிய ஒளியை தெறிக்கச் செய்ய உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது போன்ற ஆளில்லா பல கப்பல்களை நிர்மானிக்க பல நாடுகள் உதவ வேண்டும் என்று விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முதலில் ஒரு செல் அமீபா உருவாகி, பின்னர் வளர்சியடைந்து கடல் உயிரினங்கள் உருவாகி. பின்னர் அவை தரையில் வாழ கற்றுக்கொண்டு. படிப்படியாக பல பரிணாம வளர்சிகளை எட்டி, ஒரு காலத்தில் டைனசார்கள் வாழ்ந்து. அவையும் அழிந்து, பின்னர் மனிதர் தோன்றினார்கள். ஆனால் இவை எந்த ஒரு உயிரினமும் பூமிக்கு எந்த ஒரு தீங்கையும் விளைவிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு அந்த அளவு அறிவு இல்லை. ஆனால் என்று மனிதன் தோன்றினானோ அன்றில் இருந்து, அவன் தான் வாழ்ந்து வரும் பூமியை மெல்ல மெல்ல அழித்து வருகிறார். மனிதர்கள் சிந்திக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டது. நீங்கள் வாழ்ந்தால் மட்டும் போதாது. உங்கள் பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் வாழவேண்டும் அல்லவா ? அதனால் அவதானத்தோடு நடப்போம். பூமி வெப்பமாதலை தடுப்போம். வீட்டுக்கு ஒரு மரத்தை நடுங்கள் என்று அன்றே தீர்க்க தரிசனத்தோடு தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் சொன்னார். அது எந்த அளவு உண்மை என்பது இப்ப தான் புரிகிறது.
கண்ணன்