. நுட்பமான செயல்கள் மூலம் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது
14 May,2019
1969 மற்றும் 1977 ல் இருந்து சந்திரனில் அளவிடப்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து அறிவிக்கப்பட்ட ஒரு புதிய பகுப்பாய்வின் அடிப்படையில். சந்திரன் பூமியைப் போன்ற ஆற்றல் வாய்ந்ததாகவும், நுட்பமாகவும் செயல்படுகிறது என்பதை உலகில் உள்ள சில விஞ்ஞானிகள் நம்பவில்லை.
நாசாவின் அப்பல்லோ திட்டம் மூலம் சேகரிக்கப்பட்ட நில அதிர்வுத் தகவல்களில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் சந்திரனின் மேற்பரப்பில் ஸ்கார்ப்ஸ் என்று அழைக்கப்படும் பாறைக் குன்றுகள் சமீபத்தில் உருவாகி உள்ளன.
புவியியல் ரீதியாக, அதன் சூடான உள்புறம் குளிர்ந்து வருவதால் சந்திரனின் மேற்புரத்தில் நுட்பமான சுருக்கங்கள் அதிகம் ஏற்பட்டு உள்ளது. கடந்த பல மில்லியன் ஆண்டுகளாக குளிரடையும் நடைமுறையினால் 50 மீட்டர்கள் வரை சந்திர மண்டலம் சுருங்கி வருகிறது. சந்திரனின் மேற்புறம் நெகிழ்வுத் தன்மை கொண்டதல்ல என்பதால் அது சுருங்கும்போது உடைகிறது.
சந்திர மண்டலத்தின் மேற்புறத்தில் இந்த முறிவுப்பாறைகள் சிறு மாடிப்படி அமைப்பு கொண்ட மலைகளாக, சில பத்தடி மீட்டர்கள் உயரம் கொண்டவையாக, பல கி.மீட்டர்கள் பரவியுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக சந்திர மண்டலத்தின் உட்பகுதிகள் உஷ்ணமடைவதால் அங்கு பூகம்பங்கள் தோன்றுவதாகக் கருதப்பட்டது, ஆனால் தற்போது சந்திர மண்டலம் குளிரடைந்து வருவதால் சுருக்கங்கள் தோன்றுவதாகவும், பூகம்பங்கள் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
சந்திரனில் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நுணுக்கமான செயல் நடைபெற்று வருவதாக நேச்சர் ஜியோசைன்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் ஸ்மித்சோனியன் நிறுவன கிரக விஞ்ஞானி தாமஸ் வாட்டர்ஸ் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும் போது எங்கள் ஆய்வுகளின் படி இந்த பாறைமுறிவுகள் இன்னமும் செயல்நிலையில் உள்ளதால் இன்னும் சிலபல பூகம்பங்கள் அங்கு ஏற்படும். நிலவும் தொடர்ந்து குளிரடைந்து வருவதால் சுருங்கி, அதன் மேற்புறத்தில் சுருக்கங்கள் தோன்றியுள்ளன.
புவியின் நுணுக்கமான செயல்பாடு அதன் சூடான உட்புறத்தால் இயக்கப்படுகிறது. சுமார் 239,000 மைல்கள் (385,000 கிமீ) தொலைவில் உள்ள நமது கிரகத்தை சுற்றிவரும் சந்திரன், சுமார் 2,160 மைல் (3,475 கிமீ) விட்டம் கொண்டது