தொடர்ந்து 126 மணிநேரம் நடனம் ஆடி கின்னஸ் உலக சாதனை படைத்த நேபாள இளம்பெண்
04 May,2019
நேபாள நாட்டின் கிழக்கே தன்குடா மாவட்டத்தில் வசித்து வருபவர் பன்தனா நேபாள் (வயது 18). இவர் தொடர்ந்து 126 மணிநேரம் நடனம் ஆடி நீண்டநேரம் மாரத்தான் நடனம் ஆடிய தனிநபர் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக்காக, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளியின் அலுவலக இல்லத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பந்தனா கவுரவிக்கப்பட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு இந்தியரான காலமண்டலம் ஹேமலதா என்பவர் தொடர்ந்து 123 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்கள் நடனம் ஆடியது சாதனையாக இருந்து வந்தது. இதனை பந்தனா முறியடித்து உள்ளார்.