ஆபாசப்படம் பார்த்ததால் கணவனை சுட்டுக்கொன்ற 69 வயதான பெண்ணுக்கு 16 வருட சிறை
28 Apr,2019
ஆர்கன்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பட்றீசியா ஹில் 69 வயதான பெண்ணுக்கே இத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் இவர் தனது கணவர் பிராங் ஹில்லை (65) துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் என குற்றம் சுமத்தப்பட்டது.இது தொடர்பான விசாரணைகளின்போது தனது கணவர் ஆபாசப்படங்களை பார்ப்பதை சகிக்காமல் அவரை துப்பாக்கியால் சுட்டதாக பற்றீசியா ஹில் தெரிவித்தார்.
பட்றீசியா ஹில், தாதியாகவும் ஞாயிறு பாடசாலையொன்றின் ஆசிரியையாகவும் பணியாற்றியவர்.
இவரும் இவரின் கணவரும் 17 வருடங்களாக தம்பதியினராக வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.தனது கணவர் வீட்டிலுள்ள தொலைக்காட்சிக்கு பாலியல் அலைவரிசையொன்றை பெற்றதையடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பட்றீசியா தெரிவித்தார்.
இதையடுத்து தனது கணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் பட்றீசியா. ஆவரை கொல்வதற்கு தான் எண்ணவில்லை எனவும், எச்சரிப்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பட்றீசியா தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர், அவர் உடனடியாக அவசரசேவைப் பிரிவினருக்கு அழைப்புவிடுத்தார். எனினும், பிராங் ஹில்லை காப்பாற்ற முடியவில்லை.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்றீசியா ஹில் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தது.