படுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா? ஈசி ஸ்டெப்ஸ் இதோ!!
16 Apr,2019
படுக்கையில் சாய்ந்ததும் தூங்கிவிட வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலருக்கு புரண்டு புரண்டு விடியும் வரை படுத்தாலும் தூக்கம் வரவே
வராது. தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவதாக இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
* மெல்லிசை, பாடலை விரும்பிக் கேட்பவர்கள் விரைவில் தூங்கிப்போகிறார்கள். அதனால்தான் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறார்கள். அதேபோன்று எண்களை எண்ணிக்கொண்டே இருப்பவர்களுக்கும் தூக்கம்விரைவில் வருகிறது.
* பறவையின் ஒலி, நீரோடை, காற்றின் ஓசை போன்ற இயற்கையானஒலியும் சீக்கிரம் தூக்கத்தை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
* படுப்பதற்கு முன் குளியலும், அளவான உணவும், புத்தகம் படிப்பதும் நல்லதூக்கத்தைத் தருகின்றன.
ஆழ்ந்த தூக்கம்தான் மனிதனை விழிப்புக்குப் பிறகு சுறுசுறுப்பாக்கும்தன்மை கொண்டது. அதனால் தூக்கமின்மை தொடரும்போது, உடனேமருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும்