இறந்து கரையொதுங்கிய பெண் திமிங்கலம் ; வயிற்றிலிருந்த பொருளால் அதிர்ந்து போன மக்கள்
03 Apr,2019
இத்தாலியிலுள்ள கடற்கரை ஓரத்தில் கர்ப்பமாக இருந்த திமிங்கலம் ஒன்று சடலமாக கிடந்த நிலையில் அதன் வயிற்றில் 22 கிலோ கிராம் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் போர்டோ செர்வோ (Porto Cervo) பகுதியில் உள்ள கடற்கரையிலேயே குறித்த பெண் திமிங்கலம் கரை ஒதுங்கியது.
திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என மக்கள் கருதிய நிலையில் அதை வாகனம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு திமிங்கலம் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மேலும் திமிங்கலம் வயிற்றை சோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அதன் வயிற்றுக்குள் 22 கிலோ அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.
இதன் காரணமாக உணவுகளை சாப்பிட முடியாமல் திமிங்கலம் இறந்தது தெரியவந்துள்ளது.
அதாவது, பிளாஸ்டிக் தட்டுகள், மீன் பிடிக்கும் வலைகள், சாக்கு குப்பைகள் போன்றவை வயிற்றில் இருந்தன.
திமிங்கலம் உணவு உட்கொள்ளாததன் காரணமாக வயிற்றில் இருந்த குட்டியும் சரியான வளர்ச்சியடையவில்லை.
இதனிடையில் கடலை குப்பை கிடங்காக மக்கள் நினைப்பதை நிறுத்தாவிட்டால் இது போல கடல் வாழ் உயிரிழனங்கள் தொடர்ந்து இறந்து கொண்டு தான் இருக்கும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.