உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரை விட்ட நாய்
08 Mar,2019
இந்தியாவில் ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதியில் ஆரிஃப் அமன் குடும்பத்தோடு டைசன் என்ற நாய் ஒன்று வாழ்ந்துவந்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் டைசன் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. குடும்பத்தினர் வெளியே வந்துபார்த்த போது, டைசன் நாகபாம்பு ஒன்றுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
வீட்டுக்குள் நுழைய முயன்ற நாகத்தைத் தடுத்த டைசன், அதனுடன் தொடர்ந்து போரிட்டது. முடிவில் நாகத்தைக் கொன்றது டைசன்.
ஆனால் பாம்பின் விஷப்பற்கள் டைசனின் மேல் பதிந்ததால், உடம்பில் விஷம் பரவியது.
இதைப் பார்த்த ஆரிஃப், உடனடியாக கால்நடை வைத்தியருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு போது மருத்துவர்கள் யாரும் அந்த நேரத்தில் இல்லாததால், அங்கு வரவில்லை.
குறித்த சம்பத்தில் நாய் உயிரிழந்துவிட்டது.