இலங்கைத் தமிழர் கனடாவில் பொலிஸ் அதிகாரியானார்
21 Feb,2019
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தியோகஸ்தரராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இலங்கையின் திருகோணமலையினை பூர்வீகமாகக் கெளதம் என்ற இளைஞரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
திருகோணமலையினை பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை தற்போது றொரன்ரோவில் உதைபந்து பயிற்சியாளராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இலங்கையினை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞனுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.