ஆண்களின் மூளையை விட இளமையாக இருக்கும் பெண்களின் மூளை
07 Feb,2019
20 வயது முதல் 80 வயதுடையோருக்கான இந்த ஆய்வில் 121 பெண்களும், 84 ஆண்களும் பங்கேற்றனர். அதில் மூளையின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆய்வில் அதனுள் உள்ள குளுகோஸ் மற்றும் காற்றோட்டத்தின் அளவு பரிசோதிக்கப்பட்டது. அதில் கிடைத்த முடிவின் படி ஆண்களின் மூளை தங்கள் வயதை விட 2 ஆண்டுகள் 4 மாதங்கள் வரை முதியதாகவும், பெண்களின் மூளை தங்களின் வயதை விட 3 ஆண்டுகள் 8 மாதங்கள் இளையதாக இருப்பதாகவும் தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இது வயது வேறுபாடின்றி கிடைத்த சமச்சீரான முடிவு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.