சோளக் காட்டுக்குள் இறங்கிய பறக்கும் தட்டு - 2 அடி உயர குள்ள மனிதனின்
06 Feb,2019
இலங்கையில் உள்ள அம்பாறையில் நள்ளிரவில் ஒரு குள்ள மனிதன் நடமாட்டம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனால் தென் இலங்கை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
அம்பறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2-ந்தேதி விவசாயி கருணதிலக்க என்பவர் தனது சோள காட்டுக்கு காவலுக்கு சென்றார்.
அப்போது அங்கு ஒரு குள்ள மனிதன் நடமாடிக் கொண்டிருந்தான். அவன் சுமார் 2 அடி உயரமே இருந்தான். அவனை பார்த்ததும் கருணாதிலக்கவுக்கு பயம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
தான் பார்த்த சம்பவம் குறித்து பக்கத்து காட்டில் காவலுக்கு இருந்த விவசாயிகளிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் அங்கிருந்த குள்ள மனிதன் மாயமாகிவிட்டான்.
குள்ள மனிதன் குறித்து விவசாயி கருணாதிலக்க தென் இலங்கையில் உள்ள ஒரு டி.வி.க்கு பேட்டி அளித்தார். ‘‘கடந்த 2-ந்தேதி சோளகாட்டுக்கு காவலுக்கு வந்தேன். அங்கு சற்று ஓய்வெடுக்கலாம் என நினைத்து சாய்ந்து கொண்டேன். அப்போது திடீரென சத்தம்கேட்டது. உடனே நான் எழுந்து விளக்கு அடித்து பார்க்கும்போது 2 அடி உயரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். தலைமுடி நீளமாக வளர்ந்து இருந்தது. முகம் சிவப்பு நிறமாகவும், உள்நோக்கி சென்றது போன்றும் வித்தியாசமாக காணப்பட்டது. உதடுகளும் சிவப்பாக இருந்தது.
நான் விளக்கு வெளிச்சத்தை அந்த நபர் முகத்தில் அடித்து சத்தமிட்டேன் எனினும் அவர் ஒரு அடி கூட நகரவில்லை. உடனே அச்சமடைந்த நான் ஓடிச் சென்றேன். மற்ற விவசாயிகளை அழைத்து வந்து பார்த்தேன். ஆனால் அந்த நபரை காணவில்லை என்றார்.
இதற்கிடையே குள்ள மனிதர் வந்து சென்றதற்கான பாதசுவடுகள் ஆதாரமாக காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அனுராதாபுரம், பொலநறுவை பகுதிகளில் வெளிச்சமான பொருள் ஒன்று தரை இறங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
அதுகுறித்து ஆராய்ந்த போது அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தற்போது குள்ளமனிதர் தொடர்பான இந்த விவகாரத்தில் பறக்கும் தட்டு மூலம் வந்து இறங்கி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அவர் வேற்று கிரகவாசியாக இருக்கலாம் என்பதால் தென் இலங்கை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.