லண்டன் இமிகிரேஷன் ஆபிசர் தமிழர் சாப்பாட்டுக் கடையில்
06 Feb,2019
முன்னர் எல்லாம் லண்டனில் உள்ள தமிழர் கடைகளில், விசா இல்லாதவர்கள் எவராவது வேலை செய்கிறார்களா என்று இமிகிரேஷன் அதிகாரிகள் வந்து தமது ஐ.டி யைக் காட்டிவிட்டு பரிசோதிப்பார்கள். ஆனால் 2 நாட்களாக வந்து பிரியாணியும் றோல்ஸ்சும் சாப்பிட்டுவிட்டு, வெளியே சென்று. பின் பக்கத்தால் வந்து சமையல் காரரை மடக்கி பிடிக்கும் அதிகாரிகளை பார்த்தது உண்ட ?
நடந்த உண்மை சம்பவம் இது. லண்டனில் கா*** பாடலோடு சம்பந்தப்பட்ட உணவுக் கடை ஒன்று ஹரோவில் உள்ளது. உறைப்பு சும்மா தூக்கலாக போட்டு சமைப்பார்கள் என்பதற்காகவே மக்கள் அங்கே அதிகம் செல்வது வழக்கம். இன் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் பேசவல்ல ஒரு அதிகாரி அடிக்கடி அங்கே சென்று உணவை சாப்பிட்டுக்கொண்டு நோட்டமிட்டு வந்துள்ளார். 2ம் நாள் சென்றவேளை. இந்த அதிகாரி திடீரென எழுந்து பின் பக்கம் சென்று அங்கே வேலை செய்துகொண்டு இருந்த ஆளைப் பிடித்து விசா உள்ளதா என்று விசாரித்துள்ளார்.
என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை, அன் நபரிடம் விசா இல்லை. இதனால் இந்த உணவகத்திற்கு 20,000 ஆயிரம் பவுண்டுகள் தண்டம் விதித்துள்ளார்கள் . தமிழ் முதலாளிமார் காசை மிச்சம் பிடிப்பதாக நினைத்து. விசா இல்லாத ஆட்களை வேலைக்கு சேர்த்து கடைசியில் பெரும் தொகைப் பணத்தை இழந்து வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க, காட்டிக் கொடுக்காமல் இமிகிரேஷன் அதிகாரிக்கு எப்படி இந்த விடையம் தெரியும் என்று மன வேதனை அடைகிறார்கள் மேலும் சில முதலாளிகள். மொத்தத்தில் தமிழனே தமிழனுக்கு எதிரி என்கிறார்கள் சிலர் ஸ உண்மையும் இருக்க தான் செய்கிறது.