அமாவாசையன்று இந்த செயல்கள் உங்களை அதிர்ஷ்டசாலியாக்கும்
05 Feb,2019
இந்துக்களின் நம்பிக்கைகளில் மிகவும் முக்கியமான ஒன்று அமாவாசை வழிபாடு ஆகும். ஏனெனில் அமாவாசை அன்று இறந்த தன் முன்னோர்களை வழிபடுவது அவர்கள் ஆன்மாவிற்கு அமைதி அளிக்கும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் சிலரோ அமாவாசை அன்று எந்த செயல்களையும் தொடங்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். அமாவாசை நல்ல நாளா? அல்லது கெட்ட நாளா? என்ற விவாதம் பல காலங்களாக நடந்து வரும் ஒரு முற்றுப்பெறாத விவாதம் ஆகும்.
அமாவாசையன்று தீயசக்திகளின் பலம் அதிகரிக்கும் என்று பரவலான ஒரு கருத்து உள்ளது. மாந்திரீகத்தில் ஈடுபடுபவர்கள் அமாவசையைத்தான் செய்வினைகள் வைக்க தேர்ந்தெடுப்பார்கள். அமாவசை இரவானது மனிதர்களுக்கு மட்டுமின்றி இயற்கையின் மீதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் உண்மையில் அமாவசை உங்களுக்கு சில நன்மைகளையும் ஏற்படுத்தக்கூடும். அமாவாசை அன்று நீங்கள் செய்யும் சில செயல்கள் உங்கள் வாழ்வில் உள்ள துயரங்களை நீக்கி அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். அமாவாசையன்று என்னென்ன செயல்களை செய்யவேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
செயல் 1
அமாவசை அன்று நீங்கள் வழிபடவேண்டிய இரண்டு கடவுள்கள் சிவபெருமானும், காளி தேவியும் தான். இந்த கடவுள்களை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் உள்ள தீயசக்திகளை அழிக்க உதவும். அமாவாசை அன்று சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலைகளை வைத்து சிவபெருமானை வழிபடுங்கள்.
செயல் 2
இந்துக்களின் நம்பிக்கை படி அமாவாசை அன்று விரதம் இருப்பது பல நன்மைகளை வழங்கக்கூடும். அமாவாசை விரதம் உங்கள் வாழ்க்கையில் உள்ள கெட்ட சக்திகளை வெளியேற்றக்கூடும். எதிர்மறை சக்திகளின் தீயபார்வைகளில் இருந்து உங்களை பாதுகாக்க இந்த விரதம் உதவும். இந்த புனிதமான விரதம் உங்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கூட்டிவரும்.
செயல் 3
அமாவாசையன்று முன்னோர்களை வழிபடுவது மிகவும் அவசியமான ஒன்று. இறந்த முன்னோர்களுக்கு நல்ல நேரத்தில் படையிலிட்டு வழிபடுவது அவர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்தும். இவ்வாறு நீங்கள் செய்யும்போது இறந்த உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் விரும்பும் நல்ல நேரமும், நேர்மறை செயல்களும் உங்கள் வாழ்வில் நடக்க ஆரம்பிக்கும்.
செயல் 4
அமாவாசை அன்று பசு மாட்டிற்கு ஐந்து வகையான பழங்களை கொடுக்க வேண்டும். இது இது உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் எப்போதும் நிலைத்திருக்க செய்யும்.
செயல் 5
கோதுமையால் தயாரிக்கப்பட்ட உணவுகளை அமாவாசை அன்று மீன்களுக்கு கொடுப்பது அது உங்களுக்கு முன்னோர்களின் அருளை பெற்றுத்தரும். உங்கள் வாழ்வில் உள்ள பணக்கஷ்டங்கள் மற்றும் வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் இதனால் விலகும்.
செயல் 6
எலுமிச்சை பழத்தை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதனை வீட்டை சுற்றி நான்கு திசைகளிலும் எறியவும். உங்களுக்கு வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் இந்த செயல் மூலம் சரியாகும். இதனை குறுக்கு திசையில் நின்று கொண்டு யாரும் பார்க்காத வண்ணம் இதனை செய்யவும்.
செயல் 7
அமாவாசை அன்று விரதம் இருப்பது உங்களை கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை குறைக்கும். இந்த கால சர்ப்ப தோஷம் குறையும்போது அது உங்கள் எதிர்காலத்தில் அதிர்ஷ்டங்களையும், நல்ல நேரத்தையும் ஏற்படுத்தும்.
செயல் 8
அரிசியை குங்குமப்பூவுடன் சேர்த்து அதனை ஒரு சங்கில் இடவும். பின்னர் ஒரு நெய்விளக்கேற்றி ‘ஓம் ஹிரும் ஸ்ரீம் ஸ்ரீயா ஃபாட்’ என்னும் மந்திரத்தை 11 முறை கூறுங்கள். மந்திரத்தை கூறி முடித்தவுடன் இந்த கலவையை ஆற்றில் விட்டுவிடுங்கள். இந்த செயல் விரைவில் உங்களை பணக்காரராக மாற்றக்கூடும்.
செயல் 9
அமாவாசை விரதம் உங்கள் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடும். இது உங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் உங்களை வலிமையாக்கும். மேலும் உங்கள் வாழ்வில் ஆரோக்கிய பிரச்சினையோ, பணப்பிரச்சினையோ ஏற்படாது.