பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார்.
01 Feb,2019
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் சியோபன் ஞானகுலேந்திரன். இவர் லண்டனில், விண்வெளி அறிவியல் குறித்து கல்வி கற்று வருகிறார். செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என, பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்களில், திறமைமிக்க இரு மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப, பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில், சியோபன் ஞானகுலேந்திரன் மற்றும் பிரிட்டனை சேர்ந்த டியானா ஆகியோர் தேர்வாகியுள்ளார்.
இருவரும் நுண்ணியிரிகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியிலும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி ஓடத்தில் பல நாட்கள் தங்கியிருந்து, இருவரும் நுண்ணுயிரிகள் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
5Facebook5