இலங்கைத் தமிழர்கள் உட்பட பலரைக் கொன்றது நான் தான்: நீதிமன்றில் நடந்த பரபரப்பு
30 Jan,2019
8 பேரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மெக்ஆத்தர் என்ற கனேடியர் தமது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார்.
இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட 8 பேரை குறித்த நபர் கொலை செய்தமையை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அவரே கனடாவில் அதிக கொலைகளை செய்தவராக கருதப்படுகிறார் என்று கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன
இந்தநிலையில் அவரின் விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன.
இதன்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2010- 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் இரண்டு தமிழ் அகதிகள் உட்பட்ட 8 பேரைக்கொலை செய்ததாக மெக் ஆத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதற்கு ஆதாரமாக கொலை செய்யப்பட்டவர்களின் புதைக்கப்பட்ட சடலங்கள் அவரின் காணிகளில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையிலேயே அவர் நேற்று கனேடிய நீதிமன்றத்தில் தான் செய்த குற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.