சிகிச்சைக்கு வந்தவருடன் பாலியல் உறவு: தமிழ் பெண் வைத்தியருக்கு தடை!
26 Jan,2019
தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் வைத்தியராக பணியாற்றிய தீபா சுந்திரலிங்கம் (வயது 37), புற்றுநோயாளியுடன் உறவை பேணியிருக்கிறார். நோயாளியுடன் கட்டிலில் உடலுறவில் ஈடுபட்டது, நோயாளிக்கு கட்டிலில் சுய இன்பம் செய்து விட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டபோது, நோயாளியுடன் உறவை பேணியதை ஏற்றுக்கொண்டார். “அது ஒரு மனஎழுச்சிமிக்க உறவாக அமைந்திருந்ததாக“ தீபா ஏற்றுக்கொண்டார்.
அவர் வைத்தியராக செயற்பட வழங்கப்பட்ட அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
தீபா சுந்தரலிங்கத்திடம் சிகிச்சைக்கு சென்ற அந்த நோயாளியை பரிசோதித்த முதல்நாள், அவருக்கு புற்றுநோய் இருப்பதாக தீபா குறிப்பிட்டார்.
மறுநாள், தனது தொலைபேசி இலக்கம், இன்ஸ்டகிராம் விபரங்களை பகிர்ந்தார். இதன்மூலம் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, coffee shop இல் சந்தித்து பேசினர்கள்.
2015 யூலையில் இருந்து 2016 மார்ச் வரையில் 23 தடவைகள் நோயாளி சிகிச்சைக்காக வந்திருந்தார். வீட்டில், கிளினிக்கில், நோயாளியின் படுக்கையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.
இருவரது உறவு விவகாரத்தை நோயாளியின் பெற்றோரும் அறிந்திருந்தார்கள்.
இருவரும் மனதளவிலும் நெருக்கமாக பழகியிருந்தார்கள். பின்னர் அந்த உறவை முறித்துக் கொண்ட தீபா சுந்தரலிங்கம், அந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கவும் மறுத்திருந்தார். சிகிச்சைப் பதிவேட்டில் இருந்தும் அவரது பெயரை நீக்கியிருந்தார்.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டை தீபா சுந்தரலிங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வைத்தியராக செயற்பட தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது