சவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்VIDEO
20 Jan,2019
சவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பணிப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பல இன்னல்களை எதிர்கொண்டு அதற்கான இறுதி தீர்வுகளை பெற்ற பெண்கள் வௌியேறுவதற்கான அனுமதி கிடைக்கும் வரை இங்கு தங்கியுள்ளனர்.
இதன்படி 21 பெண்கள் சவுதியை விட்டு வௌியேறுவதற்கான விமான பயணச் சீட்டுகள் கிடைக்கும் வரையும், மேலும் 14 பேர் நிலுவையில் உள்ள வேதனம் கிடைக்கும் வரையிலும் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, நீதிமன்ற விசாரணைக்காக முன்னிலைப்படுத்தவுள்ள 5 பெண்களும், சவுதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நலன்புரி நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்ட 9 பெண்களும் இதில் உள்ளடங்குவதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தகவல் தருகையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் சவுதி அரசாங்கத்தினா் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.