பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவி: கட்டிலில் பாம்பே கிடப்பதாக எண்ணி, காலை
06 Jan,2019
அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
சம்பவத்தன்று குறித்த பெண்மணி பாம்பு போன்ற காலுறை (ஸ்டாக்கிங்ஸ்) அணிந்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்
இந்நிலையில் இரவில் அறைக்குள் வந்த கணவர், விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் கட்டிலில் இரண்டு பாம்பு கிடக்கிறது என நினைத்து, அருகில் இருந்த பேஸ்பால் மட்டையால், மனைவியின் காலில் பலமாகத் தாக்கியுள்ளார்.
மனைவி வலியில் அலறியபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது. அது பாம்பு அல்ல மனைவியின் கால்கள் என்று உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ள நிலையில், குறித்த யுவதி சிகிச்சைப்பெற்று வருகிறார்.