நீரோடையை கடக்க பாலத்தை பயன்படுத்தும் உயிரினங்கள்
06 Jan,2019
பாரீஸ்:பிரான்சில் சிறிய நீரோடையை கடப்பதற்கு பெரும்பாலான உயிரினங்கள், உடைந்த மரத்தை பாலமாக பயன்படுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்சில் லக் டு டெர் சாண்டிகாக் வனப்பகுதியில் சிறிய நீரோடை உள்ளது. இதன் மீது பல ஆண்டுகளுக்கு முன் மரம் ஒன்று உடைந்து விழுந்தது. தவளை, பாம்பு உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள் உட்பட பெரும்பாலான உரியிரினங்கள் நீரோடையைக் கடப்பதற்கு இந்த மரத்தை பாலமாகப் பயன்படுத்தி வருவது, உயிரியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.