14 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண் கர்ப்பம்:
05 Jan,2019
அமெரிக்காவில் 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி கடந்த 14 வருடங்களாக கோமாவில் இருக்கும் நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார். இது அந்த பெண்ணின் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.