14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்!
05 Jan,2019
புதுவை முத்தியால்பேட்டையில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 22). மாற்றுத்திறனாளி.
இவர் அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்தி சென்றார்.
பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஒரு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு ராமு தப்பி சென்று விட்டார்.
காப்பகத்தில் இருந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பாட்டியிடம் தெரிவித்தார். இதையடுத்து புதுவை குழந்தைகள் பாதுகாப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் விசாரணை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை ஏமாற்றி ராமு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து ராமுவை கைது செய்தனர்