மயக்க மருத்து கொடுத்து மனைவியை கொன்ற கணவர்
26 Dec,2018
உத்தர பிரதேசத்தில் சொத்து பிரச்சனை காரணமாக முன்னாள் மனைவியை கொன்று பேஸ்புக்கை மட்டும் ஆக்டிவாக வைத்திருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
அரியானா மாநிலம் கொராக்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திர பிரதாப் மருத்துவராக உள்ளார். இவர் முதல் திருமணத்தை மறைத்து ராக்கி ஸ்ரீவஸ்தவா என்பவரை 2-வதுதாக கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
2-வது மனைவி மூலம் தர்மேந்திர பிரதாப் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது. இதனால் ராக்கி ஸ்ரீவஸ்தவாவை பிரிந்தார்.
இதனையடுத்து ராக்கி ஸ்ரீவஸ்தவா மனிஷ் என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறுமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் ராக்கியும், மனிஷும் நேபாளத்திற்கு இன்பச்சுற்றுலா சென்றனர்.
அங்கு சில நாட்கள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். இதனையடுத்து எனக்கு இங்கு சில வேலைகள் உள்ளதால் 2-வது கணவரை ஊருக்கு செல்லும்படி ராக்கி கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து மனிஷ் மட்டும் ஊர் திரும்ப ராக்கி அங்கேயே இருந்துள்ளார்.
ஒரு மாதத்துக்கு பிறகு சகோதரியை காணவில்லை என ராக்கியின் சகோதரர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் ராக்கியின் இரண்டாவது கணவரான மனீஷ் மீது சந்தேகம் எழுந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நேபாளத்தில் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் விளக்கினார்.
ஆனால் வழக்கின் திடீர் திருப்பமாக முதல் கணவரான தர்மேந்திர பிரதாப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மேந்திராவும், அவரது சக நண்பர்கள் இருவரும் ராக்கியை மலைஉச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மனிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகும் ராக்கி தர்மேந்திர பிரதாப்வுடன் தொடர்பில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ராக்கி காணாமல் போனதாக புகார் வந்தவுடன் முதல் கணவரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கொலையாளியின் தொலைபேசி அழைப்புகள் ராக்கி நேபாளத்தில் இருந்த நாட்களுடன் ஒத்துபோனது.
இதனையடுத்தே தர்மேந்திர பிரதாப் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. ராக்கியின் தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார் உடனடியாக போக்ரா சென்று ராக்கியின் கொலை குறித்து துப்பு துலக்கினர்.
இந்த கொலை குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மனிஷ் நேபாளத்தில் இருந்து திரும்பியவுடன் கொலையாளியான தர்மேந்திர பிரதாப்பும் ,அவரது நண்பர்களும் நேபாளத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு ராக்கியை சந்தித்து குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து அவரை குன்று ஒன்றின் மீது இருந்து தள்ளி கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த பிறகு ராக்கியின் செல்போனை எடுத்துக்கொண்ட கொலையாளிகள் ராக்கியின் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்தி அவர் குவகாட்டியில் இருப்பது போன்று அவரது குடும்பத்தினரையும் நம்ப வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் இருந்து குவகாட்டிக்கு செல்போனை எடுத்து வந்த கொலையாளிகள் 3 மாதத்துக்கு மேலாக பயன்படுத்தியுள்ளனர்.
தர்மேந்திர பிரதாப் சொத்து பிரச்சினை காரணமாக தனது 2-வது மனைவியான ராக்கியை திட்டமிட்டு கொலை செய்தாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.