தஞ்சை பெரிய கோவில் நந்தி சிலையில் திடீர் விரிசல்!
09 Dec,2022
தமிழகத்தின், தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக காலத்தை வென்று உயர்ந்து நிற்கும் பிரம்மாண்டமான கலைப்படைப்புகளில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். தஞ்சாவூர் பெரிய கோயில் உலக அளவில் பேசப்படும் ஒரு அற்புதமான பொக்கிஷமாக விளங்குகிறது. கோயிலின் சிறப்பைக் கண்டு வியந்து போன யுனெஸ்கோ நிறுவனம் அதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெரிய கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அறிவித்து கண்காணித்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் மிகப்பெரிய நந்தியம் பெருமாள் அமைந்துள்ளது. இந்த நந்தி சிலையில் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். தஞ்சாவூர் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் நினைவிற்கு வரும். ஒரே கல்லால் செய்யப்பட்ட நந்திகளில் இதுவும் ஒன்று. திருச்சி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் ஆன இந்த சிலை, 19 1/2 அடி நீளம், 8 3/4 அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது.
இதன் எடை 25 டன். விஜய நகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இந்த நந்தி சிலையில் நேற்று திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறப்பு வாய்ந்த இந்த நந்தி சிலையை சீரமைக்கவும் மண்டபத்தை சீரமைக்கவும் வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திரம் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.