ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுள்ள இந்திய பயணிகளுக்கு இது இனிய தகவலாக இருக்கும்.
ஒரே விசாவில் 26 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்
இந்திய விண்ணப்பதாரர்களுக்கான ஷெங்கன் குறுகிய கால விசா நியமன விதிகளை ஜேர்மனி தளர்த்தியுள்ளது.
26 ஐரோப்பிய நாடுகள் தங்கள் உள் எல்லைகளை விடுத்து, மக்கள் சுதந்திரமான மற்றும் கட்டுப்பாடற்ற பயணத்தை பெற்றுக்கொள்ள ஷெங்கன் பகுதி என்பதை நிறுவியது.
இந்த ஷெங்கன் பகுதிக்குள் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே , போலந்து, போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின் மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
ஒரே விசாவில் 26 ஐரோப்பிய நாடுகளுக்கு அனுமதி! இந்திய சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தி | Germany Indian Tourists Schengen Visa Rules
ஷெங்கன் விசா
இந்த நாடுகளில் எந்த நாட்டிற்கு போகவேண்டும் என்றாலும் பொதுவாக ஷெங்கன் விசாவைப் (Schengen visa) பெற்றால் போதும். 26 ஐரோப்பிய நாடுகளுக்கும் இதை மட்டுமே காட்டி பயணிக்கலாம். நாட்டின் எல்லைகளைத் தாண்டும் போது மட்டும் எல்லை அதிகாரியிடம் முத்திரை பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் தண்டனைக்கு உற்படுத்தப்படுவர்.
இவற்றில் பெரும்பாலான இடங்களுக்கு, விமானங்களில் கூட செல்ல வேண்டியதில்லை. விரைவு ரயில் பயணம், சாலைப் பயணம் கூட மேற்கொள்ளலாம்.
90 நாட்கள் வரை
பயண தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஷெங்கன் விசாவானது, 90 நாட்கள் வரை, ஷெங்கன் பகுதியில் உள்ள எந்த மாநிலத்திலும் பயணிகளை சட்டப்பூர்வமாக தங்க அனுமதிக்கும். அதன்பின்னர் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விசா விதிமுறைகளில் மாற்றங்கள்
தற்போது இந்தியாவில் உள்ள ஜேர்மன் தூதரகம் தங்கள் விசா விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்திய பயணிகள் இப்போது தங்கள் வசதிக்கேற்ப, நாட்டில் எந்த முக்கிய நகரங்களிலும் உள்ள உலகளாவிய விசா வசதி சேவைகள் விண்ணப்ப மையங்களில் தங்கள் விசா சந்திப்பை பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த தளர்வு மாணவர், வேலை வாய்ப்பு மற்றும் குடும்ப மறுகூட்டல் விசா அடங்கிய D-விசா வகைக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளது.