இனி அனைத்து ஆவணங்களுக்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம். உள்துறை அமைச்சகம் அதிரடி
27 Nov,2022
ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனைத்து ஆவணங்களை பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியம் என்ற சட்டத்தை உள்துறை அமைச்சகம் இயற்ற உள்ளதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்போது அரசு பணிகள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்பதும் தெரிந்ததே
ஆனால் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு பணி உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாகிறது என தகவல் வெளியாகியுள்ளது
இதுகுறித்து பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வெளிநாட்டவர் முறைகேடாக இந்தியாவில் அதிகமாக வசித்து வரும் வசித்து வரும் நிலையில் அதனைத் தடுப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.