பென்சன் வாங்குவோருக்கு.. மொபைல் மட்டும் இருந்தா போதும்.. இந்த வசதி பற்றி தெரியுமா?
18 Nov,2022
ஓய்வூதியதாரர்கள் மொபைலிலேயே பென்சன் சீட்டு பெற்றுக்கொள்வது எப்படி?
pensioners
ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிதாக்குவதற்காக எஸ்பிஐ (SBI) வங்கி வாட்சப்பிலேயே அருமையான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மொபைலில் வாட்சப் (WhatsApp) வழியாக எளிதாக பென்சன் சீட்டு (Pension Slip) பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, இனி ஓய்வூதியதாரர்கள் பென்சன் சீட்டு பெறுவதற்காக எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அலையத் தேவையில்லை. முதலில் உங்கள் மொபைலில் 9022690226 என்ற எண்ணை சேர்க்கவும். அந்த எண்ணுக்கு வாட்சப்பில் 'Hi' என மெசேஜ் அனுப்பவும்.
அமேசானில் இருந்து ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் இப்போது லான்ச் செய்யப்பட்டுள்ளது விற்பனை முடிவதற்குள் பெறுங்கள்
அதில் ஓய்வூதியதாரர்களுக்கு தேவையான சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக வாட்சப்பிலேயே ஓய்வூதியதாரர்கள் பென்சன் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும், உங்கள் அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் பற்றிய தகவலை பெறலாம்.
இதுபோக, உங்கள் வங்கிக் கணகிற்கான மினி அறிக்கையை (Mini Statement) பெற்றுக்கொள்ளலாம். இதனால், ஓய்வூதியதாரர்கள் பென்சன் சீட்டு வாங்குவதற்காக வங்கிக் கிளைக்கு சென்று அலைவதையும், நேர விரயத்தையும் தவிர்க்க முடியும்.