250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள்.. கர்நாடகாவில் நிகழ்வு
16 Nov,2022
250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள் 250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள்
திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெற சுமார் 14,000 ஆண்கள் தங்கள் ஜாதகத்துடன் பதிவு செய்திருந்தனர்.
250 பெண்களை வரன் பார்க்க 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடிய அதிசயதக்க நிகழ்வு கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
பல இடங்களில் இளைஞர்கள் திருமணத்துக்கு மணப்பெண் கிடைக்காமல் தவிப்பதால் தகுந்த மணமகள்களை மணமுடிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வுகளில் ஆண்கள் கூட்டம் அலைமோதுவதை தொடர்ந்து பார்த்து வந்துள்ளோம். அப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், நாகமங்கலா தாலுகா ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'ஒக்கலிகா மணமக்கள் மாநாடு' என்ற பெயரில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெற சுமார் 14,000 ஆண்கள் தங்கள் ஜாதகத்துடன் பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்த திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெற 250 பெண்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர்.
இதனால் அங்கு சுமார் 14,000 ஆண்கள் திரண்டனர். இப்படி 250 பெண்களை வரன் பார்க்க ஏராளமான இளைஞர்கள் அந்த இடத்தில் திரண்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.