ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதித்த அமெரிக்கா.. காரணம் என்ன தெரியுமா?
15 Nov,2022
பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலரை திருப்பி தரவும் அபராதமாக 1.4 மில்லியன் டாலர் செலுத்தவும் ஏர் இந்தியாவுக்கு அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவதில் காலத்தாமதம் செய்ததாக கூறி டாடாவின் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது. மேலும் பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலரை ரீஃபண்டாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
விமான டிக்கெட்களை ரத்து செய்த மற்றும் பயணங்களில் மாற்றம் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் அதிக கால நேரத்தை எடுத்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பயணிகளுக்கு 121.5 மில்லியன் டாலரை திருப்பி தரவும் அபராதமாக 1.4 மில்லியன் டாலர் செலுத்தவும் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்ட ஆறு விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை திங்களன்று தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் 'கோரிக்கையின் பேரில் பணத்தைத் திரும்பப் பெறுதல்' என்ற கொள்கையானது அமெரிக்க போக்குவரத்துத் துறைக் கொள்கையான விமான டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது விமானத்தில் மாற்றம் செய்தாலோ டிக்கெட்டுகளை சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்கு எதிரானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வ விசாரணையின்படி, ஏர் இந்தியா ரத்துசெய்த அல்லது கணிசமாக மாறிய விமானங்களுக்குப் போக்குவரத்துத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட 1,900 பணத்தைத் ரிஃபெண்ட் பெறும் புகார்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றைச் செயல்படுத்த ஏர் இந்தியா 100 நாட்களுக்கு மேல் எடுத்தது என்பது தெரியவந்துள்ளது.
இதில் விந்தையானது என்னவென்றால், ஏர் இந்தியாவிக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் பணத்தை திருப்ப செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்ட சம்பவத்துக்கு காரணமாக நிகழ்வுகள் என்பது டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு முன்பு நிகழ்ந்தவையாகும்.